
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயதான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்காலின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் புதுவருட பிறப்பான இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, யாழ்ப்பாணம் அரியாலை துண்டிச் சந்திப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகினர்.
உந்துருளி வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மதிலுடன் மோதுண்டதில் அதில் பயணித்த இருவரும் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், விபத்து குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.