கோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி

பிறப்பு : - இறப்பு :

de

கோஸ்டா ரிகாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 அமெரிக்கர்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.

இதுகுறித்து கோஸ்டா ரிகா அரசு தரப்பில், “அமெரிக்கப் பயணிகளை சுமந்து வந்த விமானம் வனப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 அமெரிக்கர்கள், 2 உள்ளூர் குழுவைச் சேர்ந்த 2 பேரும் பலியாகினர்” என்று கூறியுள்ளது.

கோஸ்டா ரிகாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த விமான விபத்து தொடர்பான புகைப்படங்களை கோஸ்டா ரிகா பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விபத்தில் பலியான 3 அமெரிக்கர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் பலியான புருஸ் ஸ்டெயின்பெர்க் என்பவரின் சகோதரி இதுகுறித்து கூறும்போது, “நாங்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.

ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit