அந்தமானில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

earth-quake

அந்தமானில் கடந்த சனி கிழமை (29) காலை 5 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதுடன் வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்துள்ளன.

இதனால் கடும் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த நிலநடுக்கத் தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த மான் நிகோபர் தீவுகள் முழுவதும் உணரப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுனாமி அலைகள் உருவாகி பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit