படுத்த படுக்கையில் இருந்தபடியே 10 ஆண்டுகளாக பள்ளி நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணி

பிறப்பு : - இறப்பு :

10

பக்கவாத நோயின் காரணமாக பள்ளி முதல்வர் 10 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்தபடியே பள்ளி நிர்வாகத்தை கவனித்து வரும் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் சாஹன்பூர் பகுதியி உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வராக உள்ளவர் உமா சர்மா(64). பக்கவாத நோயின் காரணமாக இவரது இரு கைககள் மற்றும் கால்கள் செயலிழந்துள்ளன.

இந்நிலையில் இவர் கடந்த 10-ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்தபடியே கல்வி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

தனது செல்போன் மூலம் நிர்வாகத்தை கவனித்து வரும் இவர், ஒருநாளும் தன் பள்ளி பணிகளை தட்டிக் கழித்ததில்லை எனவும் தனது வகுப்பு பணிகளை அன்றாடம் செல்போன் மூலம் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 27-ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் இறந்துவிட்டார், அதன் பின் நடந்த விபத்தில் இவரது மகன் மற்றும் மகளையும் இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit