தெஹிவளை பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தெஹிவளையில் அமைந்துள்ள பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை, அத்திடிய பகுதியில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதன்போது இரண்டு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளதாகவும் கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் பொலித்தீன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பல இரசாயனப் பொருட்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லன்ச்சீட், பொலித்தீன் மற்றும் அதன்மூலம் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பாவனைக்கான தடை இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில் இந்த பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*