வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு -– கிழக்கு இணைப்பை வெறும் கோச­மாக முன்­வைப்­போர்­தான் அத­னைக் குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்­ப­தற்­காக பச்சை பச்­சை­யாக பிர­தே­ச­வா­தத்­தை­யும் கக்­கு­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டும் கிளி­நொச்சி மாவட்ட வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் நேற்­றுக் காலை நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இன்று வடக்­கு-­கி­ழக்கு இணைப்பு வேண்­டும் என்­பதை வெறும் கோச­மாக சொல்­லிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள்­தான், வடக்கு – கிழக்கு இணைப்பை சாத்­தி­ய­மற்­ற­தாக்­கிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். மன­த­ள­வில், வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என்று நினைப்­ப­வர்­கள் அத­னைக் கோச­மாக முன்­வைத்­துக் கொண்­டி­ருக்க மாட்­டார்­கள். இணைப்­புக்­கான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­வார்­கள்.

வடக்கு – கிழக்கு இணைப்­பு­வேண்­டும் என்று வெறு­மனே கூறி­னால் அது முஸ்­லிம் மக்­க­ளின் மன­தைப் பாதிக்­கும். ஏனென்­றால், தங்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கா­மல் அப்­படி எவ்­வாறு கூற­மு­டி­யும் என்று அவர்­கள் சிந்­திப்­பார்­கள். அத­னால்­தான் நாங்­கள், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள், முஸ்­லிம் மக்­க­ளின் சம்­ம­தத்­து­டன் இணைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றோம்.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பதை வெறும் கோச­மாக மாத்­தி­ரம் பாவித்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் பச்சை பச்­சை­யாக பிர­தே­ச­வா­தத்தை தமிழ் மக்­கள் மத்­தி­யில் அவிழ்த்து விட்­டி­ருக்­கின்­றார்­கள். கிழக்­கில் கருணா செய்­ததை, தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­லர் துரை­ரா­ஜ­சிங்­கம் செய்­யப் பார்க்­கின்­றாரா என்று, எந்­த­வி­தத் தொடர்­பும் இல்­லா­மல் சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். துரை­ரா­ஜ­சிங்­கம் கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்­த­வர் என்­ப­தற்­காக பிர­தே­ச­வா­தத்தை வெட்­க­மில்­லா­மல் கிளப்­பி­யி­ருக்­கின்­றார்­கள்.

இப்­ப­டிச் செய்­ப­வர்­கள், கிழக்கு முஸ்­லிம் மக்­கள் மனதை மாத்­தி­ரம் அல்ல தமிழ் மக்­க­ளின் மன­தை­யும் புண்­ப­டுத்­து­கின்­றார்­கள். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்­ப­தற்­கா­கத்­தான் இவ்­வாறு செய்­கின்­றார்­கள்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில், வடக்கு – கிழக்கு இணைப்­புத் தொடர்­பில் மூன்று தெரி­வு­கள் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வடக்கு – கிழக்கு இணைப்­பிற்­காக நாங்­கள் அவ்­வாறு வழி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், வடக்கு – கிழக்கு இணைப்பை நாங்­கள் கைவிட்டு விட்­டோம் என்று சொல்­லிக் கொண்டு வடக்கு – கிழக்கு இணைப்­பையே இல்­லா­மல் செய்­கின்ற வேலை­யைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்­றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*