இளவரசன் திவ்யா காதல் பிர்சனை போன்று மீண்டும் ஒரு சம்பவம்: கலவர பீதியில் தர்மபுரி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

e

தர்மபுரியில் இளவரசன் திவ்யா காதல் பிரச்னையால் நத்தம் பகுதியில் கலவரம் மூண்டது போன்று மீண்டும் ஒரு காதல் பிரச்சனையால் தர்மபுரி பீதியில் உறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் இருசமூக மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடுத்தடுத்துள்ளன. நல்லம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இவரின் ஒரே மகன் ராஜ்குமார், கைப்பந்து விளையாட்டு வீரர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜ்குமாரும் நல்லம்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பிரியா வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை அதியமான்கோட்டை காவல் நிலையம் வரை சென்று பேச்சுவார்த்தை மூலம் காதலர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டுச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. காதல் பிரச்னையால் சாதி ரீதியான தாக்குதல் நடக்கலாம் என்று நல்லம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்த தலித் மக்கள் அதியமான்கோட்டை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 3 பேர் இரவு 7 மணிக்கு கிராமத்தில் நுழைந்து இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்ககுதல் சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit