
தனது தம்பியுடன் மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு இருவரையும் கண்டித்த கணவரை மனைவியும், தம்பியும் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
பாக்சந்த் (25) என்பவர் தனது மனைவி மோனா தேவி (19) மற்றும் சகோதரர் ஷரவன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மோனாவுக்கும், ஷரவனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட பாக்சந்த் இருவரையும் இது குறித்து கண்டித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மோனாவும், ஷரவனும் சேர்ந்து பாக்சந்தை கொம்பால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் போட்டுள்ளனர். ரயிலில் அடிப்பட்டு அவர் இறந்ததை போன்ற தோற்றத்தை உருவாக்க இப்படி செய்துள்ளனர்.
பாக்சந்த் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் மோனா மற்றும் ஷரவனிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் தான் பாக்சந்தை கொன்றனர் என்பது உறுதியானது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.