அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரம்மாண்டமான சாதனையை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக் கொண்டே இந்த புத்தாண்டு மலர்கின்றது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்களகரமான நீரைக் கொண்டு, வளமான தேசத்தை உருவாக்கும் எண்ணிலடங்கா எதிர்கால எதிர்பார்ப்புக்கள் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு இரம்மியமான பொழுதினில் மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது.

இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன.

நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது.

அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத்தந்த வருடமாகவே கருதலாம். அதேபோன்றே 2018 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைப்பதும் நிச்சயம் வெற்றிகொள்ள வேண்டிய ஏராளமான சவால்களுடனேயே ஆகும். அந்தவகையில் அடைய வேண்டியிருக்கின்ற பொருளாதார சுபீட்சம், பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், பூரணப்படுத்தப்பட வேண்டிய மனித சுதந்திரம், இந்த மண்ணில் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நம் நாட்டின் ஒளிரிடும் நற்பெயர் ஆகியன அவற்றுள் முதலிடம் வகிக்கின்றன. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப்பினாலுமே சாதிக்க முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*