கேப்பாபுலவு வீதியை திறக்க அனுமதித்தது இராணுவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு இராணுவ முகாம் அமைத்து இராணுவத்தால் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதி இன்று(01) காலை 5 மணிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வீதியும் சுமார் 1.5 கிலோமீற்றர் வரை மறிக்கப்பட்டு இதற்கு மாற்றீடாக சுமார் 4 கிலோமீற்றர் காட்டு வழியாக புதிதாக பாதை அமைக்கப்பட்டது.

இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்ததோடு இந்த பாதையை திறந்துவிடுமாறு கோரிய நிலையில் கேப்பாபுலவு மக்கள் தமது நிலம் வேண்டி போராடி 307 ஆவது நாளான இன்று அவர்களது காணிகளுக்கு செல்ல இராணுவம் அனுமத்தித்ததோடு வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கேப்பாபுலவில் மீதமுள்ள 100 குடும்பங்களுக்கான 181 ஏக்கர் காணி விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*