ஈரான் உள்நாட்டு போராட்ட எதிரொலி: பிரான்ஸ், ஜேர்மனியில் வலுக்கும் போராட்டங்கள்!

பிறப்பு : - இறப்பு :

ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது சமீப காலமாக சிரியா மற்றும் லெபனான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

அதனை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு திரண்ட 40-க்கும் அதிகமான மக்கள் ஈரான் அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மேலும் கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இதேபோல் ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு 100-க் கணக்கில் குவிந்த மக்கள் அனைவரும் அதே முழக்கங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக மக்கள் எந்த வித கூட்டங்களையும் நடத்தக்கூடாது என அரசாங்கம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit