வைரலாகும் ரஷ்ய இளம்பெண்ணின் புகைப்படம்: காரணம் இதுதான்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தமது செய்திதொடர்பாளராக புதிதாக நியமனம் செய்துள்ள இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரஷ்யாவில் பிரபல செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய 26 வயது Rossiyana Markovskaya என்பவரைத் தான் பாதுகாப்பு அமைச்சகம் தமது செய்திதொடர்பாளராக நியமித்துள்ளது.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அவரது புகைப்படத் தொகுப்பானது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

இணைய பயன்பாட்டாளர்கள் பலர் Markovskaya-ன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அவரது புகைப்படங்களுக்கு விருப்பம் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

மட்டுமின்றி பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவை பலரும் பாராட்டியுள்ளதுடன் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*