அமெரிக்காவை நமது ஏவுகணை சென்று தாக்கும்: கர்வமாக ஸ்டாம்ப்பை வெளியிட்ட வடகொரியா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vada

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிப் பெற்றதால், அது தொடர்பான ஸ்டாம்பை வடகொரியா வெளியிட்டுள்ளது.

வடகொரியா கடந்த 29-ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

இந்த ஏவுகணை 4,475 கி.மீற்றர் உயரம் சென்ற பிறகு 950 கி.மீற்ற தூரம் பாய்ந்து சென்று கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலக்கை திட்டமிட்டபடி தாக்கி அழித்தது.

குறித்த ஏவுகணைக்கு Hwasong-15 என்று பெயரிடப்பட்டிருந்தது. இது குறித்து வடகொரியா ஜனாதிபதி அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் அதிநவீன வசாங்-15 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து வடகொரியா ஒரு அணுஆயுத சக்தி படைத்த நாடாகி உள்ளது.

அமெரிக்காவின் மிரட்டல், படையெடுப்பில் இருந்து வடகொரியாவைப் பாதுகாக்கவே இந்த சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. இதன் மூலம் பொறுப்புள்ள அணுசக்தி நாடாக வடகொரியா நடந்து கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வெற்றியை மேலும் சிறப்பாக்கும் வகையில் Hwasong-15 ஏவுகணை தொடர்பான ஸ்டாம்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் நாம் வரலாறு படைத்துவிட்டோம், அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் தன்மை இதற்கு உள்ளது.கடந்த 29-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 02.48 மணிக்கு நடந்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஸ்டாம்புகளில் Hwasong-15 ஏவுகணை, வடகொரியாவின் கொடி மற்றொரு ஸ்டாம்பில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை குறித்து ஸ்டாம்ப் வெளியிடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல எனவும் ஆகஸ்ட மாதம் நடந்த ஒரு ஏவுகணை சோதனை தொடர்பான புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டிருந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit