முல்லைத்தீவு வைத்தியசாலை தூங்குகிறதா? சுகாதார துறைக்கு மக்கள் வேண்டுகோள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

hospital

முல்லைத்தீவின் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் உறங்கு நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி அபிவ்ருத்திச் சங்கம் இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித செயற்பாடுகளிலும் இல்லாமல் தூங்கு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திகளிலும் நோயாளர் நலன்களிலும் அக்கறை செலுத்தக்கூடிய இது இவ்வாறு இருப்பது விசனத்திற்குரியதாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அரசியல் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதாகவும், இதனால்தான் இந்த சங்கம் செயற்படவில்லை எனவும் இதனால் நோயாளர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit