சித்திரவதை இடம்பெறவில்லை! – விசாரணைக்கு தயார்: ராணுவ தளபதி

பிறப்பு : - இறப்பு :

வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகளுடன் ராணுவம் எந்த வகையிலும் தொடர்புபடவில்லையென ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கிலும் கொழும்பிலும் கடத்தப்பட்ட இளைஞர்கள் ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு வதைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து வினவப்பட்ட போது அவர் அதனை மறுத்துள்ளார்.

மேலும், யுத்தத்தின் போது ராணுவத்தினர் எவ்வித யுத்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லையென குறிப்பிட்டுள்ள ராணுவ தளபதி, நாட்டை பாதுகாக்கும் பொருட்டே ராணுவத்தினர் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், ராணுவத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராணுவ தளபதி, அவை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்தழைக்க தயாரென குறிப்பிட்டுள்ளார். குற்றங்களை மறைக்க வேண்டிய அவசியம் ராணுவத்திற்கு இல்லையென்றும், குற்றங்கள் இடம்பெறாத காரணத்தினாலேயே பயமின்றி விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit