உணவு விடுதிகளில் சோதனை நடவடிக்கைகள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

food

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி சோதனை நடவடிக்கையின்போது ஒரு உணவு விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் பல உணவு விடுதிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவருடத்தில் மண்முனைப்பற்று நகருக்கு வரும் மக்கள் சிறந்த சுத்தமான உணவுகளைப் பெறுவதற்கும், தரமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தலைமையிலான குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது ஆரையம்பதி தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையிலான உணவு விடுதிகள், பொதுச்சந்தைகள், உணவு விற்பனை நிலையங்கள் என்பன சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி கே.ரமேஸ் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit