இளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன்

பிறப்பு : - இறப்பு :

இளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன் எம்.பி

வவுனியா நகரசபையினை தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு கைப்பற்றியதும் இளைஞர்களுக்கே நகரசபை தலைவர் பதவியை வழங்குவோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் இ. கௌதமனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

70 வயதை கடந்த வயோதிபர்களுக்கு நகரசபை தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை. சிலர் அவ்வாறானவர்களு;கே தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகரமானது புதிய சிந்தனையுடன் உருவாக்கம் பெற வேண்டும். இளைஞர்களே சிறந்த சிந்தனையாளர்களாகவும் புத்துருவாக்கம் மிக்கவர்களாகவும் உள்ள நிலையில் அவர்களின் கைகளில் நகர அபிவிருத்தியை ஒப்படைப்பதே சிறந்தது.

மக்களின் கருத்தறிந்து செயற்படக்கூடியவர்களை நகரசபைக்கு அனுப்ப வேண்டும்.
வெறுமனே அமைப்புகளில் இருந்தார்கள் என்ற செல்வாக்கினால் நகரசபைக்கு உறுப்பினர்களை அனுப்பி விட்டு மக்கள் அவர்களை தேடித்திரிய முடியாது.

எனவே மக்கள் இலகுவாக சென்று தமது பிரச்சனைகள் தொடுர்பாக எடுத்துக்கூறக்கூடிய அதனை செவிமடுக்க கூடிய ஆணவம் அற்றவர்களை வாக்களார்கள் தேட வேண்டும். அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் மாத்திரமே அனைத்து உள்ளுராட்சி மன்றத்திலும் உள்ளார்கள் என தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit