2018-ஆம் ஆண்டிலும் இது கண்டிப்பாக தொடரும்: வடகொரியா திட்டவட்டமாக அறிவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vadakorea

எங்களின் அணு ஆயுத மேம்பாட்டுக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் 2018-ஆம் ஆண்டிலும் இது தொடரும் என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

அதுமட்டுமின்றி கடந்த மாதம் 29-ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், அணு ஆயுத சோதனையையும் வடகொரியா நடத்தியது. அதன்பின், வடகொரியா அணு ஆயுத நாடு என்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் பகிரங்கமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வடகொரியா மீது ஐ.நா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

இந்நிலையில் வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும். வரும் 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத மேம்பாடு தொடரும். அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit