மருத்துவமனையில் நடந்த காதல் திருமணம்: ஒரே நாளில் உயிரிழந்த புதுப்பெண்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wqed

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் தனது காதலனை மருத்துவமனையில் திருமணம் செய்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

டேவிட் மோஷர் (35) என்ற நபரும் ஹீத்தர் லிண்ட்சே (31) என பெண்ணும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் திகதி லிண்ட்சேவிடம் தனது காதலை வெளிப்படுத்த டேவிட் முடிவெடுத்த நிலையில் லிண்ட்சேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது லிண்ட்சேவுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது.

ஆனாலும் தனது காதலில் இருந்து டேவிட் பின் வாங்கவில்லை. லிண்ட்சே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் புற்றுநோய் அவரின் மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர்.

மேலும். லிண்ட்சே சில காலத்தில் உயிரிழந்து விடுவார் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து டிசம்பர் 30-ஆம் திகதி காதலர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் அதற்குள்ளேயே லிண்ட்சே இறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கடந்த 22-ஆம் திகதி மருத்துவமனை படுக்கையில் படுத்தபடியே டேவிட்-ஐ லிண்ட்சே திருமணம் செய்து கொண்டார்.

இந்த நெகிழ்ச்சி தருணத்தை பார்த்த அருகிலிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள்.

திருமணம் நடந்த அடுத்த 18 மணி நேரத்தில் லிண்ட்சே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் உடலுக்கு இறுதி சடங்கள் செய்யப்பட்டது.

டேவிட் கூறுகையில், எங்களுக்குள் பெரியளவில் காதல் இருந்தது, என்னை திருமணம் செய்யும் வரை லிண்ட்சே உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit