நிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்காததால் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அதிருப்தி: அமைச்சக பொறுப்பேற்காததால் பாஜக.வில் சலசலப்பு

பிறப்பு : - இறப்பு :

குஜராத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்களில் துணை முதல்வர் நிதின் படேல் அதிருப்தி அடைந்து இலாகா பொறுப்புகளை ஏற்காமல் உள்ளார். இதனால் பாஜக.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் பொறுப்பேற்றார். துணை முதல்வராக நிதின் படேல் பதவியேற்றார். பின்னர் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த முறை பாஜக ஆட்சியில் நிதின் படேலிடம் நிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இருந்தது.

இந்த முறை நிதித்துறை பொறுப்பு சவுரவ் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் துறையை முதல்வர் விஜய் ருபானி தன்னிடமே வைத்துக் கொண்டார். இதையடுத்து துணை முதல்வர் நிதின் படேலுக்கு சாலை மற்றும் கட்டிடங்கள், சுகாதாரத் துறைகள் மற்றும் நர்மதா உட்பட சில திட்டப் பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், முக்கியத்துவம் இல்லாத துறைகளை தனக்கு ஒதுக்கியதாக நிதின் படேல் அதிருப்தி அடைந்துள்ளார். இந்தத் தகவலை பாஜக மேலிடத்துக்கும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்புகளை நிதின் படேல் இன்னும் ஏற்கவில்லை. இதனால் பாஜக.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிதின் படேலை தொடர்பு கொண்டு கருத்து கேட்க செய்தியாளர்கள் பல முறை முயற்சி செய்தனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஹர்திக் அழைப்பு

குஜராத் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

படேல் இனத்தவர்களை குஜராத்தில் பாஜக அரசு மதிக்கவில்லை என்றால், துணை முதல்வர் நிதின் படேல் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் சேர வேண்டும். 10 எம்எல்ஏ.க்களுடன் அவர் பாஜக.வை விட்டு வரத் தயாராக இருந்தால், காங்கிரஸ் கட்சியுடன் நான் பேசுகிறேன். நிதின் படேலுக்கு சரியான பதவி வழங்க காங்கிரஸுடன் நான் பேசுகிறேன்.

பாஜக மதிக்கவில்லை என்றால், படேல் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி நிதின் படேலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit