யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் கச்சதீவு கடற்பரப்பில் வைத்து காரைநகர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் 2 படகுகளில் நேற்று இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படையினர் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 13 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit