ஹற்றன் போதைப்பொருட்களின் தலைநகராக மாறிவருகிறது: ஆறுமுகன் கவலை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போதைப்பொருட்களின் தலைநகராக தற்போது ஹற்றன் நகரம் விளங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கவலை வெளியிட்டுள்ளார்.

பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்நதியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலையகத்திற்கு 4 ஆயிரம் வீட்டுதிட்டத்தை கொண்டு வந்தோம். சகல நவீன வசதிகளையும் கொண்ட ஒரு நகரை உருவாக்குவதே எமது திட்டமாக இருந்தது.

ஆனால் காலத்தால் அவை மாற்றப்பட்டு, தற்போது மலையக அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு ஒரு பத்து வீடும், இங்கு ஒரு பத்து வீடும் கட்டப்பட்டு வருகின்றன. இது வீடமைப்பு அபிவிருத்தி அல்ல.

புதிதாக வந்தவர்கள் நான்கு தூண்களை கொண்ட வீடுகளுக்கும் மக்களை முடக்க முற்படுகின்றனர். அதனை பெறுவதற்கும் கட்சியில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டுமாம். இவ்வாறானதொரு மட்டமான நிலைமைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*