யாழ்ப்பாணத்தில் தொடரும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன? விசாரணைகளில் கண்டுபிடிப்பு!

பிறப்பு : - இறப்பு :

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இடம்பெறும் மர்மமான மரணங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் மர்ம நோய் காரணமாக 21 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் தீவிர பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய மர்ம மரணங்கள் தொடர்பில் தொற்று நோய் ஆய்வு பிரிவு, மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை அதிகாரிகளின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

விசாரணைகளுக்கமைய குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பதிவாகிய அனைத்து மரணங்களும் தெளிவான நோய்த்தன்மை காரணமாக ஏற்பட்டதென உறுதியாகியுள்ளது.

இந்த மரணம் ஒரு குடும்பம் அல்லது அவர்களது உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்றது அல்ல எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொற்று நோய் அல்ல என சுகாதார சேவை இயக்குனர் ஜெயரால் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு வகை காய்ச்சலினால் ஏற்பட்டதெனவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார சேவை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மரணங்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை. அவ்வாறு வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என திரு.அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit