சுகாதார உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி யாழில் திருட்டு!

பிறப்பு : - இறப்பு :

தென்மராட்சி, கைதடி – நாவற்குழி தெற்கு பகுதியில் சுகாதார உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்திக்கொண்ட இருவர் வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரின் ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு வளவுக்குள் நோட்டமிட்ட இருவரும், சுற்றாடலில் நுளம்புப் பெருக்கம் காணப்படுவதாக தெரிவித்து, நுளம்புத் தடுப்புக்கு புகையடிப்பதற்கு கையொப்பமிடுமாறு கோரியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வீட்டுப் பெண்ணின் ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாடாசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பதாக கூறி குறித்த கொள்ளைக்காரர்களால் மற்றுமொரு வீட்டில் பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

இதேவேளை, இந்தச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அயலில் உள்ள வீட்டுக்குச்சென்று நவீல்ட் பாடசாலைக்கு பணம் சேர்ப்பதற்காக கூறி கொள்ளையர்கள் இருவரும் பணம் பெற்றுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit