ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்திய இலங்கை வீரர்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

r

2017-ல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை திமுத் கருணரத்னே பெற்றுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வதே அணிக்காக விளையாடும் போதும் அதனுடன் சேர்த்து முதல் தர போட்டிகளிலும் விளையாடி வருகிறார்கள்.

சர்வதேச அணியில் ஓய்வு பெற்ற வீரர்கள் பலரும் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் இந்தாண்டு இலங்கை வீரர் திமுத் கருணரத்னே முதல் தர போட்டிகளில் மொத்தம் 1788 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இவரின் சராசரி 45.84 ஆகும்.

2017-ல் 1491 ஓட்டங்கள் குவித்துள்ள ஜாம்பவான் குமார் சங்ககாரா பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சரே உள்ளூர் அணிக்காக இந்தாண்டு மிக பிரமாதமாக விளையாடிய சங்ககாரவின் சராசரி 106.50 ஆகும்.

பட்டியலில் சண்டிமால் 1061 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரின் சராசரி 42.44 ஆகும்.

பட்டியலில் முதலிடத்தில் உள்ள கருணரத்னே நேற்று நடைபெற்ற முதல் தர போட்டியில் கூட சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit