திருப்பதியில் நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயம்!

பிறப்பு : - இறப்பு :

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசிக்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

தரிசன வரிசை நகரத் தொடங்கியதும் பக்தர்கள் முண்டியடித்து செல்ல முயன்றபோது வெளிவட்ட சுற்றுச் சாலையில் பக்தர்கள் நின்ற தரிசன வரிசையில் கூட்ட நெரிசலால் நெருக்கடி ஏற்பட்டது.

இதில் 10இற்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் நிலைமையைச் சீர் செய்துள்ளதுடன் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அஸ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit