உலகெங்கும் பிரபலமான மின்னஞ்சல் மோசடி மன்னன் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நைஜீரிய அரச குடும்பத்தினர் பெயரில் போலி மின்னஞ்சல்கள் அனுப்பி உலகெங்கும் உள்ள மக்களை ஏமாற்றி மில்லியன் டொலர்கள் மோசடி செய்த நபரை இறுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது நபர் ஒருவரையே குறித்த உலகளாவிய மோசடி தொடர்பில் பொருளாதார குற்றவியல் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட 18 மாதம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், கணக்கிலடங்காத நைஜீரிய சொத்துக்களுக்கு அதிபதியான அந்த நபரை பிடிகூடியுள்ளனர்.

கைதான Michael Neu என்பவர் மீது பண மோசடி, முறைகேடு உள்ளிட்ட 269 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான போலி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி உலகெங்கிலும் உள்ள மின்னஞ்சல் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி, அவர்களை நம்பவைத்து அதன்மூலம் மில்லியன் டொலர்கள் முறைகேடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல நாடுகளில் இதுபோன்ற போலி மின்னஞ்சல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அந்த நாட்டு அரசே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இந்த நூதன மோசடி பரவலாக செயல்பட்டு வந்துள்ளது.

பொதுவாக அப்பாவி மக்களே இதுபோன்ற மின்னஞ்சல் மோசடியில் சிக்கியுள்ளதாக கூறும் அதிகாரிகள், பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இழந்துள்ளது நகைப்புக்குரியது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் மோசடியான இதில், நபர் ஒருவர் தாம் நைஜீரிய இளவரசர் அல்லது அரச குடும்பத்து உறுப்பினர் எனவும், தற்போது பெருந்தொகை ஒன்றுக்கு தாம் உரிமையாளர் எனவும்,

ஆனால் அந்த தொகை கிடைக்கப்பெற வேண்டும் என்றால் ஒரு சிறு தொகை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும்,

அத்துடன் தனிப்பட்ட தகவலுடன் வங்கி மற்றும் இதர பொருளாதார தகவல்களுடன் மின்னஞ்சல் ஒன்றையும் மிக விரைவில் அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடப்படும்.

தற்போது கைதாகியுள்ள Michael Neu என்பவர்தான் சில நைஜீரிய நபர்களின் ஒப்புதலுடன் பல ஆண்டுகளாக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது இதனால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*