பிரித்தானியாவில் தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு: போராடும் தீயணைப்பு வீரர்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pr

பிரித்தானியாவில் 12 மாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்களின் திறமையான செயல்பாட்டால் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

நாட்டின் மான்செஸ்டர் நகரில் ஜாய்னர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை நான்கு மணிக்கு ஒன்பதாவது மாடியில் முதலில் தீப்பிடித்தது.

பின்னர் தீயானது மளமளவென மற்ற மாடிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 12-க்கும் மேற்பட்ட உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க போராடினார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 23 வயது இளைஞர் ஒருவர் புகைகளை அதிகளவில் உள்ளிழுத்ததால் ஏற்பட்ட பாதிப்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தில் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே மருத்துவர்கள் சிகிச்சையளித்த நிலையில் பலத்த காயங்கள் யாருக்காவது ஏற்பட்டுள்ளதா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

தீயை போராடி அணைத்து வரும் தீயணைப்பு வீரர்கள் நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த லெஸ் கன் என்பவர் கூறுகையில், இந்த இடம் முழுவதும் புகை மற்றும் குப்பையாக காட்சியளிக்கிறது.

கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததை பார்க்கையில் பயங்கரமாக இருந்தது.

தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களின் செயலை அங்கு கூடியிருந்த மக்கள் கைத்தட்டி பாராட்டினார்கள் என கூறியுள்ளார்.

தீவிபத்தை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற சாலை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit