ஐ.எஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடிய ரஷ்ய கூலிப்படை: வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ias

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினருக்கு இணையாக கூலிப்படையினரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல தொழில்முறை கூலிப்படையான Wagner சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தினருடன் சண்டையிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த கூலிப்படையினரில் 150கும் மேற்பட்டோர் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ரஷ்ய கூட்டுப்படைகளுக்கு இணையாக தொழில்முறை கூலிப்படைகளும் களமிறக்கப்பட்டது. சுமார் 2,000 தொழில்முறை ரஷ்ய கூலிப்படைகள் இதற்கென தயார் படுத்தப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் போரிட்டு வந்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய சண்டைகளில் Wagner படைகளின் பங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறித்த தகவலை உறுதி செய்ய மறுப்பதுடன், தகவல்களையும் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.

Wagner படைகளுக்கான மொத்த ஆயுதங்களும் தேவையான அனைத்து பயிற்சிகளும் ரஷ்ய ராணுவ அதிகாரிகளால் மிக ரகசியமாக வழங்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஒரு Wagner படை வீரர் கொல்லப்பட்டால் அல்லது மாயமானது உறுதி செய்யப்பட்டால், அவரது குடும்பத்துற்கு இழப்பீடாக சுமார் 38,000 பவுண்ட்ஸ் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது குறித்த தொகை முழுவதுமாக தங்களுக்கு தரப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit