அமெரிக்காவுடன் நல்லுறவை தொடர விருப்பம்: டிரம்ப்புக்கு புதின் கடிதம்

பிறப்பு : - இறப்பு :

ஐரோப்பிய யூனியனில் இணைய விரும்பிய உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியை ரஷியா தனது ராணுவ பலத்தால் தனியாக பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியா என்ற தனிநாட்டை உருவாக்கியது. இதனால், அமெரிக்கா – ரஷியாவுக்கு இடையில் கடந்த மூன்றாண்டுகளாக அதிகப்படியான பூசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளுடனான நிலைப்பாட்டில் ரஷியாவும், அமெரிக்காவும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான நல்லுறவை தொடர விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பியுள்ள இந்த கடிதத்தில், ‘சம மரியாதை மற்றும் பரஸ்பர நன்மதிப்புடன் கூடிய நீண்டகால நடைமுறை சாத்தியமான நல்லுறவை அமெரிக்காவுடன் தொடர ரஷியா விரும்புகிறது. உலகை அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்ளவும், நிரந்தரத்தன்மை உருவாகவும் அமெரிக்கா – ரஷியாவுக்கு இடையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் முக்கியமானதாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit