வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்பறம் தெரியும்

பிறப்பு : - இறப்பு :

ventayam

வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.

அதாவது நீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து 3 நிமிடம் கழித்து, அதை வடிகட்டி, தேன் கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையில் குடிக்கலாம்.

வெந்தய டீ குடிப்பதன் நன்மைகள்
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்கள் போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
  • உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 1 டம்ளர் வெந்தய டீயை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி, குடல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இதய நோயின் தாக்கம், விட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படும் பெரிபெரி நோய் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்கிறது.
  • பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவும்.
  • வெந்தய டீயை தினமும் குடித்து வந்தால் அது நம் உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
  • வெந்தய டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அது மூட்டு வலி, முழங்கால் வலி முழுவதுமாக குணமாக்கும்.
  • சைனஸ், சளித் தொல்லை, பொடுகு பிரச்சனை, தொண்டைப்புண், வாய் புண் மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit