வடகொரியாவுக்கு எண்ணெய் அளித்த ஹாங்காங் கப்பலை பறிமுதல் செய்தோம்: தென் கொரியா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vadakorea

சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெயை எடுத்து சென்றதாக சந்தேகிக்கப்படும் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலொன்றை சென்ற மாதம் பறிமுதல் செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

லைட்ஹவுஸ் வின்மோர் என்ற அக்கப்பலில் இருந்த 600 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வடகொரிய கப்பலுக்கு இரகசியமாக மாற்றப்பட்டதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் வட கொரியாவுக்கு செல்லும் எந்தவொரு பொருளையும் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுவதை தடை செய்கிறது.

வட கொரியாவுக்கு கப்பல் மூலம் எண்ணெய் கொண்டு செல்வதை சீனா அனுமதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ள நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

லைட்ஹவுஸ் வின்மோரில் என்ன நடந்தது?
இந்த கப்பல் தென் கொரியாவில் உள்ள யோசு துறைமுகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி வந்த இந்தக் கப்பல் நான்கு நாள் கழித்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை எடுத்துக்கொண்டு தாய்வான் நோக்கிச் சென்றது என்று யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த கப்பல் தைவானுக்கு செல்வதற்கு பதிலாக அக்டோபர் 19ம் தேதியன்று, சர்வதேச கடல் பகுதியில், அதிலிருந்த எண்ணெய்யை ஒரு வட கொரிய கப்பல் மற்றும் மற்ற மூன்று கப்பல்களுக்கு பரிமாற்றம் செய்ததாக தென் கொரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி யோன்ஹப் தெரிவித்துள்ளது.

யோசு துறைமுகத்திற்கு நவம்பர் மாதம் திரும்பி வந்த அந்த கப்பலை பறிமுதல் செய்து தென் கொரியாவிலேயே வைத்திருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் கப்பலில் இருந்து கப்பலுக்கு எண்ணை மாற்றப்பட்டது அமெரிக்க செயற்கைக்கோள் எடுத்தப் படங்களில் பதிவாகியிருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை அமெரிக்க கருவூலத்துறை நவம்பரில் வெளியிட்டது. எனினும் அந்தக்கப்பலின் பெயர் லைட்ஹவுஸ் வின்மோர் என்பது அமெரிக்கக் கருவூலத்துறையால் குறிப்பிடப்படவில்லை.

இதில் சீனாவுக்கு தொடர்புள்ளதா?
லைட்ஹவுஸ் வின்மோர் ஹாங்காங் கொடி தாங்கிய கப்பல் என்றாலும், அது தைவானிய நிறுவனத்தால் குத்தகைக்கு விடப்பட்டது. எனவே, சீனாவிற்கு இதில் தொடர்பிருப்பதற்கான ஆதாரமில்லை.

“வட கொரியா மீது சுமத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதற்கு சீன நிறுவனங்கள் அல்லது தனி நபர்களை சீனா அனுமதிக்கவில்லை” என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் 90 சதவீதத்தை சீனா கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit