வீட்டுத் தோட்டத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kunu

கெக்கிராவ – இபலோகம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளுடன் நபரொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இபலோகம, சாந்தகம பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கைக்குண்டுகள் ஏ.எச்.பி ரகத்தை சேர்ந்தது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர், குறித்த வீட்டில் இருந்து வாள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நாளைய தினம் கெக்கிராவ நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக இபலோகம பொலிஸார் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit