கவிழும் எடப்பாடி ஆட்சி? அடுத்த முதல்வர் தினகரன்: தயாராகும் பிளான்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் கவிழ்க்கப்படும் என்றும் அதற்கடுத்து முதல்வராக தினகரன் அரியணை ஏறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக தினகரனையும், சசிகலாவையும் முதல்வர் எடப்பாடி அணியினர் ஓரங்கட்டினர்.

ஆனால் டிடிவி தினகரனின் 18 ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த நிலையில் 18 பேரையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் அணியினர் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கானது ஜனவரி 20-ஆம் திகதிக்குள் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எப்போது பேட்டி கொடுத்தாலும் ஸ்லீப்பர் செல்கள் பற்றி பேசும் தினகரன் நேற்று பேசுகையில், 2 மாதத்துக்குள் எடப்பாடி அரசு கவிழும்.

அவ்வாறு கவிழாமல் இருக்க வேண்டுமானாலும் 5 அல்லது 6 பேரின் சுயநலத்துக்கு துணை போகாமல் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்றும் கூறினார்.

சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் 117 பேர் உள்ளனர். திமுகவினர் 89 பேரும், காங்கிரஸ் 8 பேரும், முஸ்லிம் லீக், சுயேச்சை தலா 1 என உள்ளது. 18 பேரின் தொகுதிகள் காலியானதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சட்டசபையில் மொத்தம் 216 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அவர்களில் 109 எம்எல்ஏக்களை உள்ள கட்சியே ஆட்சி அமைக்க தகுதி பெறும்.

தினகரனுக்கு 50-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் ஆதரவாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில் எம்எல்ஏவாகி விட்ட தினகரன் எளிதாக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வராக ஆக முடியும் என கூறப்படுகிறது.

தகுதி நீக்க வழக்க தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாகவே வரும் என்று தெரிகிறது. அப்படி வந்தால் தினகரனுடன் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தினகரன் சட்டசபைக்கு வந்த பின்னர், அவர் கூறியது போல் 5 அல்லது 6 பேரை தவிர்த்து மற்றவர்கள் தினகரனுக்கு ஆதரவு தந்து அதிமுக அம்மா அணியின் சட்டசபை குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் தினகரன் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*