ரசிகரை தேடிச்சென்று அடித்து உதைத்த முன்னணி கிரிக்கெட் வீரர்!

பிறப்பு : - இறப்பு :

மைதானத்தில் ரசிகரை தேடிச்சென்று தாக்கிய விவகாரத்தில் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வங்கதேச சர்வதேச கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருபவர் சபீர் ரஹ்மான்.

இவர் சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசன் அணிக்காக விளையாடினார்.

இந்த போட்டியின் போது ஒரு ரசிகர் கத்திக்கொண்டே இருந்த நிலையில் கடுப்பான சபீர் நடுவரின் அனுமதியின்றி ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று கத்திய ரசிகரை தாக்கியுள்ளார்.

இதையடுத்து சபீரின் ஒழுங்கின்மை குறித்து புகார் பதிவான நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சபீரின் செயலுக்கு சில சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit