உலகின் மிகவும் குளிரான பகுதிகளின் பட்டியல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ulk

பூமியில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் மிகவும் குளிர்ச்சியான பகுதிகளில் பெரும்பாலானவை ரஷ்யாவில் அமைந்துள்ளன. அந்த நகரங்களின் சிறப்பு என்ன தெரியுமா?

ரஷ்யாவில் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒய்மியாகன். உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்களில் முதலிடம் வகிக்கும் இந்த நகரின் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையே 500 தான்.

வருடத்தின் சராசரி வெப்பநிலையே -50°C என்பதால் அனைத்து நாள்களிலும் இங்கே குளிர் வாட்டி எடுக்கும். அதிலும் 1933-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் திகதி வெப்பநிலை −67.7 °C யாக பதிவு செய்யப்பட்டது.

அது வடக்கு அரைக்கோளத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைவான வெப்பநிலை. இங்கு இருக்கும் ஹீட்டிங் பிளான்ட் அனைத்து நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும்.

ஐந்து மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உறைந்து விரிசல்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் இங்கு மின்தடையே ஏற்படாதவாறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் இன்னொரு நகரம் Yakutsk. 1891-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் திகதி பதிவான −64.4°C தான் இங்கு பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை.

மழை பெய்யும் மாதங்களில் மட்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும். 2010-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை 269,601.

இங்கு ஒரு விமான நிலையமும் செயல்பட்டு வருகிறது. மிக அதிகமான குளிர் காரணமாக இந்த ஊரில் மக்கள் நடமாட்டத்தை அதிகமாகக் காண முடியாது.

மக்கள் நிரந்தரமாக வசிக்கும் குளிரான இடங்களிலேயே பரப்பளவில் பெரியதாகக் கருதப்படும் நகரம் நார்சிலிக்.

இங்கு நிரந்தரமாக வாழும் மக்கள் மட்டுமே 1,75,000 பேர். இங்குள்ள தொழிற்சாலை ஊழியர்கள், குறுகிய காலம் தங்கிச் செல்பவர்கள் என சுமார் 2,20,000 பேர் இருப்பார்கள்.

இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை சராசரியாக -55 °C இருக்கும். ஒரு காலத்தில் தூய்மையான இடமாக இருந்தது நார்சிலிக். இங்கு கனிமவளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

வருடம் முழுவதும் வெளியேற்றப்படும் புகையாலும், இதரக் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பொழுது உலகின் அதிகம் மாசடைந்த இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது ரஷ்யாவின் நார்சிலிக் நகரம்.

மற்ற இடங்கள்போல Fort Good Hope நகரின் நிலைமை அவ்வளவு மோசமில்லை. சாதாரண நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை.

ஆனால் குளிர்காலங்களில் வெப்பநிலை குறைந்தே காணப்படும். 1917-ம் ஆண்டு ஒரு நாள் வெப்பநிலை −56.1°C என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 515 பேர் மட்டுமே குடியிருக்கின்றனர். மக்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்தாலும் இந்த ஊரில் இரண்டு வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன, தபால் சேவையும் கிடைக்கிறது. இது தவிர 2013-ம் ஆண்டில் இங்கு 4G சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit