21 ஆண்டுகளாக பேசாத பெண் திடீரென உரையாற்றிய அதிசயம்: வியந்த தாய்

பிறப்பு : - இறப்பு :

கனடாவில் விபத்தில் சிக்கி கடந்த 21 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த மகள் தற்போது திடீரென தொழில்நுட்ப உதவியுடன் அம்மாவுடன் தொடர்பு கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஜோலின் ஹண்ட்லே (37) என்ற பெண் கடந்த 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் திகதி கார் விபத்தில் சிக்கினார்.

அவருடன் காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஜோலின் காப்பாற்றப்பட்டார்.

ஆனாலும் அவருக்கு மூளை காயம் ஏற்பட்டதால் கடந்த 21 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார்.

குடும்ப உறுப்பினர்களை சத்தத்தை வைத்து திரும்பி பார்ப்பாரே தவிர அவர்களை ஜோலினால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜோலினுக்கு புத்தாடை உடுத்தப்பட்டது.

இதையடுத்து அவர் அருகில் சென்ற தாய் மிஸ்னர் கிறிஸ்துமஸ்க்கு நீ உடுத்திய உடை எனக்கு பிடித்துள்ளது என கூறினார்.

இதற்கு தன் அருகில் இருந்த ஐபேடில் தான் அணிந்திருந்த ஸ்லீவ் சட்டை உடை போட்டோவை எடுத்து தாயிடம் ஜோலி காட்டியுள்ளார்.

இத்தனை நாள் தனது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இருந்த ஜோலி தற்போது தொழில்நுட்ப உதவியுடன் பதிலளித்தது மிஸ்னரை ஆச்சரியபடுத்தியுள்ளது.

மிஸ்னர் கூறுகையில், இது கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த அற்புதமாக கருதுகிறேன்.

விபத்து ஏற்பட்டதால் ஜோலிக்கு கிடைத்த உதவித்தொகை மூலம் ஐ மோசன் கமெரா, மென்பொருட்கள், ஐபோன் போன்ற தொழில்நுட்ப கருவிகளை வாங்கினோம்.

இதுநாள் வரை அதை வைத்து எங்களை தொடர்பு கொள்ளாத ஜோலி தற்போது அதன் உதவியுடன் உரையாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit