இந்த பெண்ணை நினைவு இருக்கிறதா? தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த நாள், நினைவு இருக்கிறதா.,.?

காதலித்து, ஆசை வார்த்தைகூறி நம்பவைத்து, கர்ப்பமாக்கி, திருமணம் செய்துகொள்ள மறுத்து ஆறுமாத கர்ப்பினியை கூட்டு வல்லுறவு செய்து, வயிற்றில் இருந்த சிசுவை உறுவி, கருவறுத்து,பச்சைப்படுகொலை செய்த நாள் இன்று..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் நந்தினி.இவர் கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். நந்தினிக்கு வயது 17.

நந்தினிக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த 26 வயதான மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

டிசம்பர் 26-ந்தேதி நந்தினி திடீரென மாயமானார். அவரது தாயார் ராஜகிளி நந்தினியை பல இடங்களில் தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. மேலும் மணிகண்டன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் போலீசில் புகார் அளித்தார்.

நந்தினி கீழமாளிகை கிராமத்தில் 2017 ஜனவரி 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, பாழும் கிணற்றில் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்

நந்தினியின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்

மணிகண்டனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் நந்தினியை சம்பவத்தன்று அழைத்து வந்து வீட்டில் அடைத்து கற்பழித்து கொலை செய்ததாகவும்,

இதற்கு தனது நண்பர்களான மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோரும் உதவியதாகவும் தெரிவித்தார்

நந்தினி கொலை வழக்கில் மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான முதல் குற்றவாளி மணிகண்டன் உடன் நண்பர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*