கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: கோமாவில் இருந்து மீண்டவர் மரணம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஷ்யாவில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நீண்ட 2 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட Gizar Ziyangareev என்பவருக்கு ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமது வயதான தாயார் மற்றும் 3 சிறு குழந்தைகளின் எதிர்காலம் கருதி தண்டனை காலத்தை குறைக்க கோரிய அவருக்கு 30 நாட்கள் குறைத்து ரஷ்யாவின் Bashkortostan பகுதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பு ரஷ்யாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 கற்பழிப்பு குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான குறித்த நபர் ஒரே வாரத்தில் 4 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளார்.

அதில் ஒருவர்தான் 33 வயதான Anna Barmina. சம்பவத்தன்று தனியாக சிக்கிய அன்னாவை கத்தி முனையில் மிரட்டி கைகளால் தாக்கி, அருகாமையில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்துள்ளார் Gizar Ziyangareev.

பின்னர் உடைந்த மரக் கிளையை பயன்படுத்தி அன்னாவின் பிறப்புறுப்பை சிதைத்து குற்றுயிராக விட்டுச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதலில் மாரடைப்புக்கு உள்ளான அன்னா சுய நினைவை இழந்து பின்னர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து 2 ஆண்டுகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அன்னா பொலிவை இழந்ததுடன் உடலில் 30 கிலோ வரை எடை மெலிந்தார்.

மருத்துவமனையில் சேர்ப்பித்த ஓராண்டுக்கு பின்னர் கோமா நிலையில் இருந்து மீண்டாலும், அதன் பின்னர் அவர் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட எவருடனும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த நிலையில் அவரது உடலின் அனைத்து முக்கிய பாகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்க, இறுதியில் நீண்ட 2 வருட போராட்டத்திற்கு பின்னர் அன்னா உயிரிழந்துள்ளார்.

அன்னாவின் உடல் கடந்த வியாழனன்று Ufa நகரின் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*