பெற்ற தாயை கொன்று எரித்து விட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மகன்: அதிர்ச்சி சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து எரித்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அசோக் என்பவருக்கு தீபா (50) என்ற மனைவியும் அக்‌ஷய் (23) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

அசோக் மஸ்கட்டில் வேலை செய்து வரும் நிலையில், அவர் மகள் திருமணமாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்

கேரளா வீட்டில் தீபாவும் அக்‌ஷயும் மட்டும் வசித்து வருகிறார்கள். இன்ஞினியரிங் படிப்பை இந்தாண்டு முடித்த அக்‌ஷய் அரியர்ஸ் வைத்துள்ள மீதமுள்ள பேப்பர்களை முடிக்க காத்திருந்தார்.

இந்நிலையில் போதை பழக்கத்துக்கு அடிமையான அக்‌ஷய்க்கு அவனின் தாய் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தீபாவிடம் அக்‌ஷய் பணம் கேட்ட நிலையில் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் அத்திரமடைந்த அக்‌ஷய் தனது தாயை படுக்கை விரிப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

பின்னர் வீட்டு கொல்லைப்புறத்தில் சடலத்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளான்.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் எல்லோரும் கொல்லைபுறத்தில் குப்பையை போட்டு எரிப்பார்கள் என்பதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரவில்லை.

ஆனால் அடுத்த நாள் எப்படியோ எரிந்த நிலையில் சடலம் அக்‌ஷய் வீட்டில் கிடப்பதாக அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.

இந்நிலையில் தனது தாயை காணவில்லை என அக்‌ஷய் பொலிசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளான்.

ஆனால் பொலிஸ் விசாரணைக்கு அவன் சரியாக ஒத்துழைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் தீபாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளான்.

தீபாவை கொலை செய்து எரித்த பிறகு வீட்டில் ஆம்லெட் சாப்பிட்டதாகவும், பின்னர் வெளியில் நண்பர்களுடன் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டதாகவும் அக்‌ஷய் வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதையடுத்து அக்‌ஷயை கைது செய்த பொலிசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தீபா இறந்த தகவல் அவரின் கணவன் மற்றும் மகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு அவர்கள் வந்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*