இங்கிலாந்திடம் படுமோசமாகத் தோற்ற இந்தியா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 153 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியா தனது முதலாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதேபோல இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பிரிஸ்பேனில் இன்று பலப்பரிட்சை நடத்தின. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். இந்தியா சேஸிங்கில்தான் திறமையான அணி என்று பெயரெடுத்துள்ளது. எனினும் முதலில் பேட்டிங்கை டோணி தேர்வு செய்தார்.

ஆனால் டோணியின் திட்டம் ஈடேறவில்லை. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 பந்துகளை சந்தித்த நிலையில் ஆன்டர்சன் பந்து வீச்சில் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அம்பத்தி ராயுடு, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்தபோது ரஹானே, 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.

அதன்பிறகு வந்த கோஹ்லி 4 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 1 ரன்னிலும் அவுட்டாக, அம்பத்தி ராயுடுவும் 23 ரன்களில் பெட்டியை கட்டினார். 19 ஓவர்களிலேயே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இக்கட்டான நேரத்தில் கேப்டன் டோணியும், ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியும் போராட்டத்தை தொடங்கினர்.

டோணி 34 ரன்களிலும், அதன்பிறகு களமிறங்கிய அக்ஷர் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும், புவனேஸ்வர் குமார் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போராடிய ஸ்டூவர்ட் பின்னியும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

39.3 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் ஸ்டீவ் ஃபின் 5 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இடைவேளைக்கான ஓய்வு கூட எடுக்காமல் உடனடியாக பேட்டிங் செய்ய வந்தது இங்கிலாந்து அணி. அணியின் ஸ்கோர் 25-ஆக இருந்தபோது, தொடக்க வீரர் மொயின் அலி, ஸ்டூவர்ட் பின்னி பந்து வீச்சில் விராட் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். அப்போது வெற்றிக்கான நம்பிக்கை இந்திய அணிக்கு எட்டிப்பார்த்தது.

ஆனால் இந்திய அணியின் நம்பிக்கையை இயான் பெல், ஜேம்ஸ் டெய்லர் ஜோடி தகர்த்தது. இருவரும் நங்கூரமிட்டு ஆடி 27.3 ஓவர்களிலேயே 156 ரன்களை குவித்தனர். இதனால் போனஸ் புள்ளிகளும் அந்த அணிக்கு கிடைத்தது.

8 பவுண்டரிகளுடன் 91 பந்துகளில் 88 ரன்களுடன் இயான் பெல்லும், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 56 ரன்களுடன் ஜேம்ஸ் டைலரும் இறுதிவரை களத்தில் நின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 2004ம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில் 106 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது இங்கிலாந்து. ஆனால் இன்றைய போட்டியில் 135 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் இந்தியாவை துவம்சம் செய்துள்ளது இங்கிலாந்து.

dhawan

eng-vs-ind

eng-vs-ind2

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*