எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்கும் தினகரன் – பாதுகாப்பு வளையத்தில் தலைமைச் செயலகம்

பிறப்பு : - இறப்பு :

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன், எம்.எல்.ஏ-வாக இன்று பொறுப்பேற்க இருக்கிறார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த 21-ல் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க ஆகியவற்றைத் தோற்கடித்து சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் தவிர, தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தினகரனின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-வாக இன்று பொறுப்பேற்க இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் மதியம் 1.30 மணியளவில் அவர் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையொட்டி தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தைச் சுற்றி கூடுதலாக 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தினகரனுக்கு ஆதரவாகத் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் ஆங்காங்கே சில பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit