மக்களின் எதிர்காலத்திற்காக வாளை கையிலேந்த தயங்கமாட்டேன்: ஜனாதிபதி

பிறப்பு : - இறப்பு :

நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்திற்காக துணிந்து வாளை கையிலெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தலின் நகர்வுகள் குறித்த வேலைத்திட்ட நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, சிறந்த மற்றும் மக்களால் விரும்பப்படும் ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் வகையில் வாளுடன் எனது பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.

வீசும் வாள் அடையாளம் தெரியாது வெட்டும் என்று இலக்கியத்தில் நான் படித்துள்ளேன். அதேபோல், எனது வாளால் வெட்டப்படுவது எனது நண்பர்களா, எனது உறவுகளாக என்று எனக்கு தெரியாது.

தூய்மையான அரசியலை உருவாக்கும் எனது போராட்டத்தில் எந்தக் கட்சி, எந்த நிறம், யார் வெட்டப்படப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.

நாட்டின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் எதிர்காலத்திற்காகவும் நான் துணிந்து செயற்படுவேன். எனது இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit