ஆஃப்கானிஸ்தானில் தற்கொலை படைத் தாக்குதல் 40 பேர் உடல்சிதறி பலி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காபூல்: ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் ஏராளமானோர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சோவியத் படையெடுப்பின் 38வது ஆண்டு விழா நிகழ்ச்சி அங்குள்ள டெபியான் சமூக-கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தின் நடுவே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 40 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை அந்நாட்டு அரசும் உறுதி செய்துள்ளது.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும் ஆஃப்கன் அரசு தெரிவித்துள்ளது

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாலிபன் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மறுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆஃப்கானிஸ்தானின் உளவுத்துறை அலுவலகம் அருகே ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர் இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடந்திருப்பது மக்களிடையே மரண பீதியை அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 150 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*