
ஜேர்மனியில் உள்ள சிறையில் நான்கு கைதிகள் தப்பியது தொடர்பான சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் தலைநகரான Berlin-ல் இருக்கும் Ploetzensee சிறைச்சாலையில் நான்கு கைதிகள் தந்திரமாக அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், சிறையில் இருந்த நான்கு கைதிகள், சிறையின் கான்கிரிட் கட்டடங்களை ஓட்டை போட்டு வெளியில் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறையில் இருந்த அலாரம் உடனடியாக ஒலி எழுப்பாமல், அரை மணி நேரத்திற்கு பின்னரே ஒலி எழுப்பியுள்ளது. இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து தப்பிய நான்கு பேரில் ஒருவன் கார் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தவன் என்றும் அவன் தான் இதை தெளிவாக ஓட்டை போட்டு வெளியில் தப்பிப்பதற்கு உதவியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம் சிறையில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்த போது, அவர்கள் தப்பிப்பதற்கு வெளியில் இருந்து ஒரு நபர் உதவியுள்ளார்.
ஆனால் அவர் தெளிவாக தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தப்பிய நான்கு கைதிகளும் 2020-ஆம் ஆண்டு நான்காம் மாதம் விடுதலை ஆக வேண்டியவர்கள்.
மேலும் குறித்த சிறைச்சாலையில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். இதில் சுமார் 577 கைதிகள் இருக்கலாம் என்றும் தற்போது 362 கைதிகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.