சூரியனின் காந்தசக்தியில் மாற்றம் இனி பூமியில் தொடர்ச்சியாக அரங்கேற இருக்கும் நிகழ்வுகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

12,000 ஆண்டுகள் முன்புவரை பூமி பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னரே பனியுகம் முடிந்து பனி இடைக்காலம் தொடங்கியது.

மொத்தம் ஐந்து முறை கடுமையான பனி யுகங்கள் வந்திருக்கின்றன.அந்த சமயங்களில் உலகம் முழுவதுமே பனி மூடி இருந்திருக்கிறது.

பூமத்திய ரேகைப் பகுதி வரைக்கும் பனி பரவியிருந்த காலங்களும் உண்டு.அப்படி ஒரு பனி யுகம் கடைசியாக சுமார் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வந்திருக்கிறது.அது படிப்படியாகக் குறைந்திருக்கிறது.

அதில் 41,000 வருட சுழற்சியாகப் பனியுகம் சிறிய அளவில் வந்திருக்கிறது.அந்தச் சிறிய பனி யுகங்களில் உலகம் முழுவதும் பனி மூடுவதில்லை.

உலகின் வட பாகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் மட்டுமேபனி மூடி இருக்கிறது.

அப்படிப் பட்ட ஒரு பனியுகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் உச்சம் அடைந்ததுஎன்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அந்தப் பனி யுகத்தின் போது இந்தக் கண்டங்களின் மீது பல கி.மீ உயரத்துக்குப் பனி மூடியிருந்தது.இந்தப் பனிக்கான நீர் கடலிலிருந்து கிடைக்கிறது.

பனி மழையாகக் கொட்டுவதாலும்,நதிகள் ஓடாமல் உறைந்து போவதாலும்,கடலுக்குச் செல்லும் நீர் உலகளாவிய அளவில் குறைகிறது.பனி யுகம் தீவிரம் அடைய அடைய,கடல் நீர் குறைந்து,பல இடங்களில் நிலங்கள் வெளியே தெரிந்தன.

தற்போது அதே போன்று சூரியனின் காந்தசக்தி செயல்பாடு காரணமாக சிறு பனியுகம் ஏற்பட்டு அதன் மூலம் பிரிட்டனில் உள்ள பெரிய நதிகள் அனைத்தும் அடுத்த 20 ஆண்டுகளில் உறைந்து போகும் என்று பல்லைக்கழக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் ரஷ்யா பல்லைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனில் காந்தசக்தி செயல்பாடு காரணமாக 2021ம் ஆண்டு முதல் அங்கு தட்ப வெட்ப நிலை குறைய தொடங்கும். இது 2030ம் ஆண்டி பிரிட்டனில் உள்ள பெரிய நதிகளை உறைய செய்யும் அபாயம் உள்ளது.

நார்தும்பிரியா பல்கலைக்கழக கணித பேராசிரியர் வேலன்டினா சர்கோவா தலைமையிலான குழுவினர் மாஸ்கோ முதல் சூரியனில் இருந்து உற்பத்தியாகும் இரண்டு காந்த அலைகளின் நகர்வை கண்காணித்தனர்.

இது 3 கிரக சுழற்சிகளில் 2021ம் ஆண்டு முதல் காந்த அலைகளின் சக்தியை படிப்படியாக குறைத்து, 33 ஆண்டுகளில் முற்றிலுமாக குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் காந்தசக்தி குறைவதன் மூலம் பூமியில் குளிர்ந்த நிலை ஏற்படுத்தும் என்று வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*