விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகல்!

பிறப்பு : - இறப்பு :

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார்.

விஜயதாச ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதி, பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும், சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர்.

10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ​ ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பரிந்துரைக்கு அமைய விஜேதாச ராஜபக்‌ஷவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit