தெனியாயவில் கார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: பிரபல பாடகி படுகாயம்

பிறப்பு : - இறப்பு :

பிரபல பாடகி பயணித்த கார் 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில், பாடகி, சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

தெனியாயவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நேற்று (புதன்கிழமை) இரவு பயணித்துக் கொண்டிருந்த வேளையில் தியதாவ பிரதேசத்தில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பாடகி, பலத்த காயமடைந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனையோர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை கொஸ்மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit