பெண் ஒருவரின் அட்டகாசம்! நடுவீதியில் இருவர் மீது கத்திக் குத்து!

பிறப்பு : - இறப்பு :

பாணந்துறையில் இருவர் மீது பெண் ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவன் மற்றும் பிறிதொரு பெண்ணின் மீதே கத்திக் குத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பாணந்துறை, ஹிரன வீதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அருகில் நேற்றிரவு நடைபெற்றது.

கத்தியால் குத்திய பெண் தப்பிச் சென்றுள்ள நிலையில், காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறர்.

காயமடைந்தவர்கள் 52 ஆண் மற்றும் 47 வயதான பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

கத்தியால் குத்தியவர் 48 வயதுடைய பெண் எனவும், இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit