முல்லைத்தீவில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது!

பிறப்பு : - இறப்பு :

முல்லைத்தீவில் இன்புளுவென்ஸா பீ வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதத்தில் 09 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று குறித்து ஆராய்வதற்கு கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் மருத்துவர் கேசவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் நகரில் அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எவ்வித வைரஸ் தொற்றுகளும் காரணமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற வகையில் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் மருத்துவர் கேசவன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit